மாவட்ட செய்திகள் மார்ச் 28,2023 | 13:07 IST
கும்பகோணம் அருகே சாலியமங்கலம் அழகிய முத்து வேம்பு அய்யனார், பிடாரி அம்மன், சேதுராயர் கோயில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. வெண்ணாற்றில் இருந்து புனிதநீர் எடுத்துவரப்பட்டு நான்கு கால யாக பூஜைகள் நடந்தது. கடம் புறப்பட்டு கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து