மாவட்ட செய்திகள் மார்ச் 29,2023 | 16:35 IST
உளுந்தூர்பேட்டை அருகே புத்தமங்கலம் பரிந்தல் உள்ளிட்ட கிராமங்களில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி கடத்தப்படுவதாக எலவனாசூர்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியில் வந்த மினி வேனை மடக்கினர். போலீசாரைக் கண்டதும் டிரைவர் வண்டியை நிறுத்திவிட்டு ஓட்டம் பிடித்தார். சோதனை செய்தபோது சுமார் 2 டன் ரேஷன் அரிசி இருந்தது. ரேஷன் அரிசி, மினி வேனை பறிமுதல் செய்து தப்பி ஓடிய பரிந்தல் கிராமத்தைச் சேர்ந்த ராஜி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து