சிறப்பு தொகுப்புகள் மார்ச் 29,2023 | 20:26 IST
கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் நடிப்பில் நாளை வெளியாகும் படம் ‛பத்து தல'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தில் ‛ராவடி' என்ற பாடலுக்கு நடிகர் ஆர்யாவின் மனைவியும், நடிகையுமான சாயிஷா குத்தாட்டம் போட்டுள்ளார். திருமணம், குழந்தை பிறப்பால் ஓரிரு ஆண்டுகள் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த இவர் இந்தபாடல் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். கிட்டத்தட்ட புஷ்பா படத்தில் இடம்பெற்ற சமந்தா ஆடிய ‛ஊ சொல்றியா...' பாடலுக்கு நிகராக ஆட்டம் போட்டுள்ளார் சாயிஷா. இந்த பாடலுக்கு 25 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகள் கிடைத்து வரவேற்பை பெற்றுள்ளன. ‛‛கணவர் ஆர்யாவின் விருப்பத்தின் பேரில் இந்த பாடலுக்கு ஆடியதாக'' கூறியிருந்தார் சாயிஷா. இந்த 5 நிமிட பாடலுக்கு ரூ.40 லட்சம் சம்பளமாக அவர் பெற்றுள்ளார். அதேசமயம் படத்தின் நாயகியான பிரியா பவானி சங்கர் இந்த படத்தில் 28 நாட்கள் கால்ஷீட் கொடுத்து நடித்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவருக்கு இந்த படத்தில் பேசப்பட்ட சம்பளம் வெறும் ரூ.30 லட்சம் மட்டுமே. சாயிஷா உடன் ஒப்பிடுகையில் பிரியாவிற்கு ரூ.10 லட்சம் சம்பளம் குறைவே.
வாசகர் கருத்து