நம்ம ஊரு கோயில்கள் மார்ச் 31,2023 | 07:00 IST
செங்கல்பட்டு மாவட்டத்தில், 11ம் நூற்றாண்டில் பெருமாள் கோயில் வரதர் சன்னதி கட்டபட்டது. பட்டாபிராமர் கோட்டையில் சுவாமி வீற்றிருந்தார். 18ம் நூற்றாட்டில் நடந்த படையெடுப்பில் இந்த கோயில் தகர்க்கப்பட்டது. திம்ம ராஜ என்ற ஜமீன் மகன் செங்கல்வராயன் , 1786ல் வரதர் கோயிலை இடம் மாற்றினார். இவருக்கு பெருமை சேர்க்கவே இந்த ஊர் செங்கல்பட்டு என அழைக்கப்படுகிறது. 200 ஆண்டுகளுக்கு முன் செங்கல்பட்டு என்பது செங்கழுநீர்பட்டு என அழைக்கப்பட்டது கோயிலில் உள்ள கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது. அகழாய்வில் கிடைத்த பானைகள் ஓடுகள், காசுகள், ஓலைகள், கருங்கற்கள், செப்பு தகடுகள் மீதும் எழுத்துகள் பொறிக்கப்பட்டு உள்ளன. வெள்ளி, தங்கம் தகடுகள் மீதும் எழுத்து பொறிக்கும் வழக்கம் தமிழகத்தில் இருந்ததை இது உணர்த்துகிறது.
வாசகர் கருத்து