மாவட்ட செய்திகள் மார்ச் 30,2023 | 00:00 IST
புதுச்சேரி சட்டப்பேரவை கேள்வி நேரத்தின் போது அமைச்சர் தேனீ ஜெயக்குமார் பதிலளித்து பேசினார். நிலத்தடி நீர் பயன்பாட்டை கண்காணிக்க ஏற்படுத்தப்பட்ட மத்திய அரசின் நெறிமுறைகள் புதுவையிலும் செயல்படுத்தப்படும். இனி விவசாயிகள் ஆழ்குழாய் கிணறு அமைக்க அரசிடம் அனுமதி பெறத்தேவையில்லை என்றார். விவசாயிகள் ஆழ்குழாய் கிணறு அமைத்தவுடன் நிலத்தடி நீர் அதிகார அமைப்பில் பதிவு செய்தால் சான்றிதழ் வழங்கப்படும். அதன் மூலம் மின் இணைப்பு பெறலாம். அரசு மானியம் பெற விரும்பும் விவசாயிகள் முறையாக அனுமதி பெற்ற பிறகு ஆழ்குழாய் கிணறு அமைக்க வேண்டும் என்றும் பேசினார்.
வாசகர் கருத்து