மாவட்ட செய்திகள் மார்ச் 30,2023 | 17:56 IST
ஓசூர் அருகேயுள்ள ஒசபுரம் கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ ராமர் மற்றும் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் இன்று ஸ்ரீ ராம நவமி விழா கொண்டாடப்பட்டது. கோயிலில் உள்ள 32 அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் சிலைக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. ராம நவமியை முன்னிட்டு ஆஞ்சநேய சுவாமியின் சிலைக்கு ரோஜா மலர்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
வாசகர் கருத்து