மாவட்ட செய்திகள் மார்ச் 30,2023 | 19:45 IST
பழங்காலப்பொருட்கள் சேகரிப்பு என்பது ஒரு அரிய பொழுது போக்காகும். அவை அலங்கார கலைப் பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றன. பழங்காலப் பொருள்கள் என்பது பழைய பொருள்கள் அல்ல. அவற்றில் கலைத்திறனும் அன்றைய கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் விளக்கும் கைவண்ணமாகவும் , பழங்காலத்தில் உபயோகித்த பொருள்கள் அரிய வடிவமைப்பில் செய்யப்பட்டதை விளக்குவதாகவும் உள்ளது. நாம் தொலைத்து விட்ட பல நினைவுகளை அசைப்போடும் விதமாக பழங்காலப் பொருள்கள் உள்ளது. அப்படியான பழங்கால பொருள்களை கோவை மாவட்டம் அன்னூர் -மேட்டுப்பாளையம் சாலை, பொகலூரில் உள்ள ஸ்ரீதர் மாரப்பன் சேகரித்தும் சில பொருட்களை விற்பனையும் செய்து வருகிறார். This antique collector from Kovai has spectacular collections from across Southern states of India . His collections are mostly age -old antique household utility items that were used by our ancestors in yesteryears.
வாசகர் கருத்து