மாவட்ட செய்திகள் மார்ச் 30,2023 | 20:21 IST
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. கோவை கணுவாய், தடாகம், சோமையம்பாளையம் பகுதிகளில் அரை மணி நேரம் திடீரென பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. 3 நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் திடீர் மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
வாசகர் கருத்து