பொது மார்ச் 31,2023 | 00:00 IST
தமிழகத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, திண்டுக்கல் பூட்டு,சேலம் சுங்கிடி சேலை, காஞ்சி பட்டு, மதுரை மல்லிகை உட்பட 45 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. புதிதாக மணப்பாறை முறுக்கு, மானாமதுரை தேன், ஆத்தூர் வெற்றிலை உள்ளிட்ட 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புவிசார் குறியீடு பெற்ற தமிழக தயாரிப்புகளின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது. நாட்டிலேயே அதிக புவிசார் குறியீடுகள் பெற்ற முதல் மாநிலமானது தமிழகம். கர்நாடகம், உத்தரபிரதேசம் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. புவிசார் பெற்ற பொருட்களை வியாபார நோக்கத்தோடும், போலியாக வேறு பெயர்களில் பயன்படுத்துவதையும் தடுக்க முடியும்.
வாசகர் கருத்து