மாவட்ட செய்திகள் மார்ச் 31,2023 | 15:21 IST
சென்னை, கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளுக்கு பேராசிரியர் உள்ளிட்ட 4 பேர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்கள் எழுந்தன. நடவடிக்கை எடுக்க மாணவிகள் வலியுறுத்தினர். தமிழக சட்ட சபையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, இது குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தது. விவாதங்களுக்கு பதில் அளித்து முதல்வர் ஸ்டாலின் பேசினார். மாணவிகளின் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
வாசகர் கருத்து