மாவட்ட செய்திகள் மார்ச் 31,2023 | 16:09 IST
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அசோக் நகரில் வசிப்பவர் செல்லமுத்து. குண்டடம் மத்திய கூட்டுறவு வங்கியில் அதிகாரி. இவரது மனைவி கவிதா, நிலவள வங்கியில் சூப்பர்வைசர். இவர்கள் நேற்று வேலைக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பினர். மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 9 பவுன் நகை, வைர கம்மல், வெள்ளி பொருட்கள் , ரூ. 3 லட்சம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றது தெரிந்தது. செல்லமுத்து போலீசில் புகார் அளித்தார். தாராபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
வாசகர் கருத்து