மாவட்ட செய்திகள் மார்ச் 31,2023 | 16:23 IST
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மீன்கடைகளில் பார்மாலின் ரசாயன ஊற்றி பதப்படுத்தப்பட்ட 200 கிலோ மீன்கள், நண்டுகளை உணவு பாதுகாப்பு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. விற்பனை செய்த மூன்று கடைகளுக்கு 2000 ரூபாய் வீதம் 6000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. கடை வியாபாரிகளிடம் கெட்டுபோன மீன்களை விற்பனை செய்யக்கூடாது என எச்சரித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மீன்களை நகராட்சி குப்பை கிடங்களில் பினாயில் ஊற்றி அழித்தனர்.
வாசகர் கருத்து