மாவட்ட செய்திகள் மார்ச் 31,2023 | 16:17 IST
சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில், போலீசார் இன்று விடியற்காலை சோதனை நடத்தினர். டெல்லியில் இருந்து வந்த ஒரு பயணியின் பையில், 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான 10 கிலோ கஞ்சா இருந்தது. பயணி குறித்த போலீஸ் நடத்திய விசாரணையில், அவர் பெயர் அப்துல் காதர் என்பதும் கேரளாவை சேர்ந்தவர் என்பதும் தெரிந்தது. கஞ்சாவை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து