மாவட்ட செய்திகள் மார்ச் 31,2023 | 16:40 IST
மலுமிச்சம்பட்டி, இந்துஸ்தான் இன்ஜி., தொழில்நுட்ப கல்லுாரியின் முன்னாள் மாணவர்கள் சார்பில், கல்லுாரி மாணவர்களுக்கான வாலிபால் போட்டி இந்துஸ்தான் கல்லுாரி மைதானத்தில் நடந்தது. போட்டியை கல்லுாரியின் தலைமை செயல் அலுவலர் கருணாகரன் துவக்கி வைத்தார். முதல்வர் ஜெயா, உடற்கல்வி இயக்குனர் ரவிக்குமார்பலர் பங்கேற்றனர். போட்டிகள் 'நாக்- அவுட்' முறையில் நடத்தப்பட்டன. இதில், 15 அணிகள் பங்கேற்றன. முதல் போட்டியில் இந்துஸ்தான் முன்னாள் மாணவர்கள் 'ஏ' அணி, 2-0 என்ற செட் கணக்கில், நேரு இன்ஜி., கல்லுாரி அணியை வென்றது.
வாசகர் கருத்து