மாவட்ட செய்திகள் மார்ச் 31,2023 | 16:47 IST
திருச்சி மாவட்டம் துறையூர் கண்ணனூரில் உள்ள தனியார் வேளாண்மை தொழில்நுட்பக்கல்லூரி வளாகத்தில், எதிர்கால விவசாய புரட்சியை நோக்கி என்ற தலைப்பில் வேளாண் கண்காட்சி நடைபெற்றது. வேளாண் சார்ந்த தொழில்நுட்பங்கள், இயற்கை நெல் ரகங்கள், பயறு வகைகள், இயற்கை வேளாண் இடுபொருட்கள், இயந்திரங்கள் கண்காட்சியில் காட்சி படுத்தப்ட்டிருந்தது. பழங்கால நெல் வகைகள், அரியவகை மரக்கண்றுகளை மாணவர்கள் பார்த்தனர். வேளாண் மாணவர்கள், பள்ளி மாணவர்கள், விவசாயிகள் என ஏராளமானோர் கண்காட்சியை பார்வையிட்டனர்.
வாசகர் கருத்து