பொது மார்ச் 31,2023 | 18:01 IST
பிரதமர் மோடியின் கல்வி தகுதி விவரங்களை தெரிந்து கொள்ள விரும்புவதாக, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், 2016ம் ஆண்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தார். மோடியின் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு விவரங்களை தரும்படி, பிரதமர் அலுவலகம், குஜராத் பல்கலை, டில்லி பல்கலைக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, குஜராத் பல்கலை, அந்த மாநில ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான சொலிசிடார் ஜெனரல் துஷார் மேத்தா, ‛இந்த விவகாரத்தில் எவ்வித பொது நலனும் இல்லை. ஒரு சிலரின் குழந்தைத்தனமான, பொறுப்பற்ற ஆர்வமிகுதியால் எழுப்பப்படும் கேள்விகளுக்காக, தகவல்களை வெளியிடும்படி கூறக்கூடாது' என்றார்.
வாசகர் கருத்து