பொது மார்ச் 31,2023 | 19:15 IST
சென்னை தாம்பரம் அடுத்த வேங்கைவாசல் சாலையில் நெடுஞ்சாலை துறை சார்பில் வடிகால் கட்டும் பணி நடக்கிறது. அப்பகுதியில் செயல்படும் கட்டுமான நிறுவனம் மணல், கற்களை சாலையோரம் கொட்டி இடையூறு செய்தது. ஆர்ஐ மாணிக்கம் இடையூறுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார். அப்போது கட்டுமான நிறுவனத்திற்கு ஆதரவாக பேசிய திமுக கவுன்சிலர் சுரேஷ், ‛வேலையை நிறுத்துடா, வாயெல்லாம் ஒடைச்சி விடுவேன்' என ஏக வசனத்தில் பேசினார்.
வாசகர் கருத்து