மாவட்ட செய்திகள் மார்ச் 31,2023 | 20:03 IST
கோவை மேட்டுப்பாளையம், ஊட்டி இடையே மலை ரயில் இயக்கப்படுகிறது. அடர்ந்த காடு வழியாக செல்வதால், இயற்கை அழகினை கண்டு ரசிக்க இந்த ரயிலில் பயணம் செய்ய அதிகம் பேர் ஆர்வம் காட்டுவர். மலை ரயிலில் 3 பெட்டிகள் மட்டுமே இணைக்கபட்டு ரயில் இயக்கப்படுகிறது கோடை விடுமுறை துவங்குவதால் சுற்றுலா பயணிகள் வசதிக்காக சிறப்பு ரயில் விட வேண்டும் என கோரிக்கை எழுந்தது. கோரிக்கையை பரிசீலனை செய்த தெற்கு ரயில்வே ஏப்ரல் 14 முதல் ஜூன் 25 வரை சிறப்பு ரயில் இயக்குவதாக அறிவித்துள்ளது.
வாசகர் கருத்து