மாவட்ட செய்திகள் மார்ச் 31,2023 | 20:18 IST
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசனாகும். சீசனில் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் உதகைக்கு வருவர். கோடை விழாவை முன்னிட்டு மலர்கண்காட்சி, ரோஜா கண்காட்சி, காய்கறி கண்காட்சி, பழ கண்காட்சி முதலியவை நடக்கும். சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க ஏப்ரல் 1ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் சினிமா படப்பிடிப்புக்கு நடத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
வாசகர் கருத்து