மாவட்ட செய்திகள் ஏப்ரல் 01,2023 | 15:51 IST
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலையில் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. யார் காளைகள் முதலில் அழைத்து வருவது என்பதில் இருதரப்பிற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. நார்த்தாமலை கிராமத்தைச் சேர்ந்த சரவணன் உள்ளிட்ட இளைஞர்கள் மீது சிலர் கட்டையால் தாக்கினர். கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வாடிவாசல் முன்பு அமர்ந்து போராட்டம் நடந்தது. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதியளித்தனர்.
வாசகர் கருத்து