மாவட்ட செய்திகள் ஏப்ரல் 01,2023 | 16:56 IST
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் சமயபுரம் மாரியம்மன் கோயில் உள்ளது. இன்று பூசாரி கோவிலை திறக்க வந்தார். கோவில் பூட்டு உடைக்கப்பட்டு உண்டியல் திருடு போயிருந்தது. பூசாரி போலீசில் புகாரளித்தார். எடப்பாடி விவசாய காட்டுக்குள் உண்டியல் உடைந்து கிடந்தது. உண்டியலில் இருந்த ரூ 50 ஆயிரம் இல்லை. குமாரபாளையம் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
வாசகர் கருத்து