மாவட்ட செய்திகள் ஏப்ரல் 01,2023 | 19:33 IST
கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் கண்ணில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் செய்தனர். வருவாய் கிராம ஊழியருக்கு இணையாக மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் ரூ.6750 அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு திட்டத்துடன் இணைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
வாசகர் கருத்து