மாவட்ட செய்திகள் ஏப்ரல் 01,2023 | 20:56 IST
ஏப்ரல் முதல் நாளை சிலர் ஏப்ரல் ஃபூல் தினம் என அழைக்கப்படுவது வழக்கம். ஏப்ரல் முதல் நாளை, இனி ஏப்ரல் கூல் தினமாக மாற்றும் வகையில் மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் பசுமை நண்பர்கள் இயக்கம், யங் இந்திய அமைப்பினர், மேற்கு ரோட்டரி இணைந்து இந்த பசுமை மரக்கன்றுகளை நட்டனர். மாணவர்கள் அனைவருக்கும் 2023 ஆண்டை குறிக்கும் வகையில் 2023 மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இதில் 25 வகையான விதவிதமான மரக்கன்றுகளை அவர்கள் பொறுப்பில் நட்டு வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேற்கு ரோட்டரி சங்க தலைவர் ராமநாதன், செயலாளர் பொன்குமார், அமெரிக்கன் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், அட்சய பாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து