மாவட்ட செய்திகள் ஏப்ரல் 02,2023 | 19:40 IST
பொதுமக்களுக்கு இடையூறு தரும் பேனர்கள், கட்அவுட்களை வைக்க கூடாது என திமுக தலைவர் ஸ்டாலின் ஏற்கனவே கட்சியினருக்கு உத்தரவு போட்டார். இத யாரும் கண்டுக்கல மீறி பேனர்கள் வைத்தனர். கட்அவுட்கள், பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்ககூடாது மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி அறிக்கையும் வெளியிட்டார். இருவரது உத்தரவையும் காற்றில் பறக்கவிட்டு திருச்சி மாவட்ட திமுகவினர் பேனர் வைத்து விசுவாத்தை வெளிப்படுத்துகின்றனர். திருச்சி மாவட்டத்தில் நேரு மற்றும் மகேஷ் இருவரது ஆதரவாளர்கள் போட்டி போட்டு பேனர் வைக்கின்றனர். மேல கல்கண்டார் கோட்டை பகுதியில் பகுதிதலைவர்கள், கவுன்சிலர்கள், அமைச்சர் மகேசை வரவேற்று ஏராளமான பேனர்களை ரோட்டின் இருபுறமும் வைத்துள்ளனர். ரோட்டில் வைக்கும் பேனர்களால் ஏற்படும் ஆபத்துகளை உணராமல் இவர்கள் வைக்கும் பேனர்களை பார்த்து பொதுமக்கள் முகம் சுழிக்கின்றனர். தலைமை இவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமா என பொதுமக்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
வாசகர் கருத்து