மாவட்ட செய்திகள் ஏப்ரல் 13,2023 | 13:28 IST
முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ 3 கோடி மோசடி செய்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடக்கிறது. இந்நிலையில் வழக்கை ரத்து செய்யகோரியும், நிபந்தனைகளை தளர்த்த கோரியும் ராஜேந்திர பாலாஜி சார்பில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஜோசப் தலைமையிலான அமர்வு விசாரித்தது. வழக்கு விசாரணை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், ராஜேந்திர பாலாஜி வெளி மாநிலங்கள் செல்ல சென்னை ஐகோர்ட்டில் அனுமதி பெற்று செல்லலாம் என ஜாமீனை நீட்டித்து உத்தரவு வழங்கியது.
வாசகர் கருத்து