மாவட்ட செய்திகள் ஏப்ரல் 18,2023 | 12:10 IST
கோவை எம்எல்ஏ வானதி தனது அறிக்கையில், சீர்காழி சட்டநாதர் கோயில் சீரமைப்புப் பணியின்போது, பஞ்சலோக சுவாமி சிலைகளும், செப்பேடுகளும் கிடைத்துள்ளன. தமிழ் மொழியின் பொக்கிஷங்களில் ஒன்றான, தேவாரப் பதிகங்கள் செப்பேடுகளில் எழுதப்பட்டிருப்பது உலக தமிழர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சீர்காழியில் கிடைத்துள்ள சுவாமி சிலைகள், செப்பேடுகள் மற்றும் ஆழ்வார்திருநகரியில் கிடைத்துள்ள ஓலைச்சுவடிகளை ஆய்வு செய்தால், அதன் மூலம் தமிழக வரலாற்றை நாம் நன்கு அறிந்து கொள்ள முடியும். திமுக அரசுக்கு, ஹிந்து மதத்தின் மீதும் கோயில்கள் மீதும், அதன் கலாசாரத்தின் மீதும் நம்பிக்கை இல்லை. எனவே அரசு, ஆன்மீக,தொல்லியல் அறிஞர்களை கொண்டு சிலை , செப்பேடுகளை ஆய்வு நடத்த வேண்டும் என கூறியுள்ளார்.
வாசகர் கருத்து