மாவட்ட செய்திகள் மே 04,2023 | 17:20 IST
திண்டுக்கல் மாவட்டம் எரியோட்டை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தியின் மகன் தருண் சாஸ்தா வயது 21. கெச்சிணிபட்டியை சேர்ந்த சக்திவேல் மகன் சுராஜ் வயது 21. இருவரும் திண்டுக்கல் ஜி.டி.என் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கின்றனர். இன்று பிற்பகல் கல்லூரியில் இருந்து டூவீலரில் வீட்டுக்கு புறப்பட்டனர். சூடாமணிப்பட்டி பிரிவில் முன்னாள் சென்ற மணல் டிப்பர் லாரி வலது புறம் திரும்பியது. லாரி திடீரென திரும்பியதால் டூவீலர் லாரியின் பின்பக்கம் மோதியதில் இருவரும் லாரியின் டயரின் கீழ் விழுந்தனர். லாரி டயர் இருவரது உடல் மீதும் ஏறியது. இதில் இருவரும் நிகழ்விடத்திலேயே இறந்தனர்.
வாசகர் கருத்து