மாவட்ட செய்திகள் மே 04,2023 | 17:44 IST
அவிநாசியில் பழமையான அவிநாசிலிங்கேசுவரர் கோயிலில் ஆண்டு தோறும் சித்திரைத் தேர்த் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு சித்திரைத் தேர்த்திருவிழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய விழாவான தேரோட்டம் கடந்த இருதினங்கள் நடந்தது, இன்று அம்மன் தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பெண்கள், குழந்தைகள் என ஆயிரக்கணக்கானோர் தேரை வடம் பிடித்து ரத வீதிகளில் இழுத்தனர்.
வாசகர் கருத்து