மாவட்ட செய்திகள் மே 07,2023 | 00:00 IST
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மெலட்டூர், கரம்பை உள்ளிட்ட பகுதியில் 500 ஏக்கரில் நெல் நடவு செய்யப்பட்டுள்ளது. தொடர் மழையால் வயல்களில் இரண்டு அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கியுள்ளது. லிங்கன் வடிகால் வாய்க்கால் தூர்வாராததால் மழைநீர் வெளியேற வழியில்லை. கடந்த இரண்டு நாட்களாக வயல்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் நாற்றுகள் அழுகி வீணாகி வருகிறது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
வாசகர் கருத்து