மாவட்ட செய்திகள் மே 08,2023 | 14:30 IST
ஈரோடு மாவட்டம் இடையங்காட்டு வலசில் வசிக்கும் சங்கரை சந்திக்க பரமத்தி வேலூரைச் சேர்ந்த தொழிலதிபர் சந்தோஷ்குமார் காரில் வந்தார். சந்திப்புக்கு பின் சந்தோஷ் குமார் தனது காரை எடுக்க முயன்றார். ஸ்டார்ட் ஆகவில்லை. காரை அங்கேயே நிறுத்திவிட்டு உணவருந்த சென்றார். காரில் இருந்து புகை வருவதாக அங்கிருந்தவர்கள் கூறினர். சந்தோஷ்குமார் வந்து பார்ப்பதற்குள் காரின் முன் பக்கம் தீ பற்றியது. தீயணைப்பு துறையினர் தீ அணைத்தனர்.
வாசகர் கருத்து