மாவட்ட செய்திகள் மே 11,2023 | 00:00 IST
நெல்லை மாவட்டம் வீரராகவபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா மே 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஸ்ரீவரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தார். முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது. சர்வ அலங்காரத்துடன் தாயாருடன் வரதராஜப்பெருமாள் எழுந்தருளினார். பக்தர்கள் கோவிந்தா கோபாலா நாராயணா கோஷங்களுடன் வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு ரதவீதிகளையும் சுற்றி மீண்டும் நிலையை வந்தடைந்தது.
வாசகர் கருத்து