மாவட்ட செய்திகள் மே 17,2023 | 17:57 IST
கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். புதுச்சேரியிலிருந்து கடலூருக்கு டூவீலரில் வந்தவரை மடக்கி சோதனை செய்தனர். டூவீலரில் இருந்த 3 சாக்கு மூட்டைகளை சோதனை செய்ததில், 300 மதுபாட்டில், 50 சாராய பாக்கெட் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரித்ததில் புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பத்தை சரவணன் என்பதும், மதுபாட்டில், சாராய பாக்கெட்டுகளை கடலூருக்கு கடத்தி வந்து விற்பனை செய்ய முயன்றதும் தெரிந்தது.
வாசகர் கருத்து