மாவட்ட செய்திகள் மே 17,2023 | 20:34 IST
திருச்சி கோப்பு கிராமத்தில் மகா மாரியம்மன் கோயிலில் தேர்திருவிழா கடந்த 5 ம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை தொடங்கியது. மாரியம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. பக்தர்கள் உய்யகொண்டான் வாய்க்கால் பாலத்திலிருந்து பால்குடம், தீர்த்த குடம், அலகு குத்தி, பறவைகாவடி எடுத்து நேர்த்தி கடனை செலுத்தினர். இன்று கிடா வெட்டும் நிகழ்ச்சியும், முத்து பல்லக்கில் மாரியம்மன் வீதி உலா நடைபெறுகிறது.
வாசகர் கருத்து