மாவட்ட செய்திகள் மே 22,2023 | 11:31 IST
மத நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியாகிறதா என்று கோவை சைபர் கிரைம் போலீசார் கண்காணித்தனர். 'கோவையில் பிரியாணி ஜிஹாத். கருத்தடை மாத்திரை கலந்து ஹிந்துக்களுக்கு பிரியாணி விற்பனை செய்வதாகவும், முஸ்லிம்களுக்கு மட்டும் கருத்தடை மாத்திரை கலக்காத பிரியாணி விற்பனை செய்வதாகவும், அதை போலீஸ் கண்டறிந்துள்ளதாகவும்' டுவிட்டரில் பொய்யான பதிவுகள் வெளியாகி இருப்பது தெரியவந்தது. பதிவுகளை வெளியிட்ட 9 டுவிட்டர் பதிவர்கள் மீது சைபர் கிரைம் போலீசார் 4 சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிந்தனர்.
வாசகர் கருத்து