மாவட்ட செய்திகள் மே 23,2023 | 17:50 IST
கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தின் ஒரு பகுதியில், பதிவுத்துறைக்குச் சொந்தமான பழமையான கட்டடம் இருந்தது. 1914 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட அந்தக் கட்டடத்தில், மாவட்டப்பதிவாளர் நிர்வாக அலுவலகம் , உதவி பதிவுத்துறை தலைவர் அலுவலகம், மாவட்டப்பதிவாளர் தணிக்கை அலுவலகங்கள் உள்ளிட்டவை செயல்பட்டன. 108 ஆண்டுகள் பழமையான இந்தக் கட்டடத்தை இடித்து, அதே இடத்தில் புதிய கட்டடம் கட்ட பதிவுத்துறை சார்பில் ரூ.4 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு இயங்கி வந்த அலுவலகங்கள், சிரியன் சர்ச் ரோட்டிலுள்ள மாநகராட்சி கல்யாண மண்டபத்துக்கு மாற்றப்பட்டுள்ளன.
வாசகர் கருத்து