மாவட்ட செய்திகள் மே 25,2023 | 00:00 IST
சென்னை ஓட்டேரி போலீசார் பெரம்பூர் ஜமாலயா பேருந்து நிலையம் சந்திப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படி வந்த 2 வட மாநில வாலிபர்களை சோதனை செய்ததில் 1 கிலோ கஞ்சா இருப்பது தெரிந்தது. விசாரணையில் பீகாரைச் சேர்ந்த முகமது அக்தர் (25), அகிபூர் ரஹ்மான் (19) என்பதும் கோயம்பேட்டில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்வது தெரிந்தது. பீகாரிலிருந்து ரயிலில் வரும் போது கஞ்சா கடத்தி வந்ததாக தெரிவித்தனர். 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையிலடைத்தனர்.
வாசகர் கருத்து