மாவட்ட செய்திகள் மே 25,2023 | 15:46 IST
கல்வராயன் மலை அடிவாரம் பரிகம் கிராமத்தில் எம்எல்ஏ உதயசூரியன் தலைமையில் திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பிரசாரம் நடந்தது. திமுக பேச்சாளர் கந்திலி கரிகாலன் பேசினார். தங்கள் பகுதியில் ஒரு வருடமாக குடி தண்ணீர் வரவில்லை என எம்எல்ஏ உதயசூரியனை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். எம்.எல்.ஏ., வை காரில் ஏற விடாமல் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வாசகர் கருத்து