மாவட்ட செய்திகள் மே 25,2023 | 18:16 IST
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் வாகன சோதனையில் ஈடுபட்டார். சந்ததையடி தெருவை சேர்ந்த இசக்கிராஜா, வெள்ளூரை சேர்ந்த கண்ணன் இருவரும் மூட்டைகளை டுவீலரில் வைத்து எடுத்து வந்தனர். சந்தேகத்தின் பேரில் மூடைகளை அவிழ்த்து பார்த்ததில் ஆற்றுமணல் இருந்தது. போலீசாரின் விசாரணையில் இருவரும் சிறுக சிறுக டுவீலரில் மணல் கடத்தி விற்பனை செய்தது தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்தனர். மணல் மூட்டைகள் மற்றும் டுவீலரையும் பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து