மாவட்ட செய்திகள் மே 26,2023 | 18:19 IST
முகையூரை சேர்ந்த ராணுவ வீரர் சகாயராஜ் வயது 46. விடுமுறையில் முகையூர் வந்த சகாயராஜ், மனைவி பிரிட்டோ மேரி, குழந்தைகள் ரிங்சின், ஷெரின், பிரிட்டோ மேரியின் தங்கை புனிதா ஆகியாருடன் கொடைக்கானலுக்கு காரில் சுற்றுலா சென்றார். திரும்பும் வழியில் விழுப்புரம் அருகே சித்தானங்கூர் பை பாஸில் வந்தபோது கார் டயர் வெடித்தது. கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு கட்டையை தாண்டி எதிர் திசையில் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு பஸ் மீது மோதியது. காரில் பயணம் செய்த சகாயராஜ், மனைவி பிரிட்டோ மேரி அங்கேயே இறந்தனர். படுகாயம் அடைந்த இரண்டு குழந்தைகள் மற்றும் புனிதா விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். திருவெண்ணைநல்லூர் போலீஸார் சகாயராஜ் , பிரிட்டோ மேரி உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து