மாவட்ட செய்திகள் மே 27,2023 | 14:07 IST
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும், சுங்கக் கட்டணம் வசூல் செய்யவும் 2023-2024-ஆம் ஆண்டுக்கான ஏலம் பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது. ஏலத்தில், பரிசல் இயக்க ஒப்பந்தத்துக்கு 23 ஒப்பந்ததாரர்களும், சுங்கக் கட்டணம் வசூல் செய்ய 30 ஒப்பந்ததாரர்களும் கலந்து கொண்டனர். இந்த ஆண்டிற்கான பரிசல் துறை ஏலம் ரூ. 1.40 கோடிக்கும், சுங்கக் கட்டண வசூல் ஏலம் ரூ. 1.21 கோடிக்கும் ஒப்பந்தம் விடப்பட்டது. இதனல் கடந்த ஆண்டைக் காட்டிலும் அரசுக்கு ரூ. 40 லட்சம் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது. ஏலம் நடந்தபோது திடீரென மாங்கரை ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர், மற்றும் அரகாசனஅள்ளி ஊராட்சி மன்றத் தலைவரின் மகன் ஆகியோர் கூட்ட அரங்கில் நுழைந்து, வட்டார் வளர்ச்சி அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீஸார் அவர்களை வெளியேற்றினர். இதனால் ஏலத்தில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தாமதம் ஏற்பட்டது.
வாசகர் கருத்து