மாவட்ட செய்திகள் மே 27,2023 | 00:00 IST
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மீனாட்சிபுரத்தில் உள்ளது பழமையான காளியம்மன் கோயில். இன்று அதிகாலை 4.30 மணிக்கு கோயில் பூசாரி செல்வம் நடை திறந்தார். காலை 6 மணிக்கு அம்மன் கழுத்தில் இருந்த ஒரு பவுன் தங்க தாலி திருடு போனது தெரி்யவந்தது. நத்தம் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் காலை 5 மணியளவில் ஒருவர் பய பக்தியுடன் கோயில் பிரகாரத்தை சாமி கும்பிட்டவாறு சுற்றி வருவதும் பின்னர் கோயிலின் கருவறைக்குள் சென்று அம்மனின் கழுத்தில் இருந்த ஒரு பவுன் தங்க தாலி, பூஜை தட்டில் இருந்த பணத்தை எடுத்து பாக்கெட்டில் வைத்து கொண்டு அம்மனை கும்பிட்டு விட்டு செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. நத்தம் போலீசார் மர்ம நபரை தேடுகின்றனர்.
வாசகர் கருத்து