மாவட்ட செய்திகள் மே 27,2023 | 17:54 IST
திருச்சி மாவட்டம் முசிறி சின்னவேளகாநத்ததை சேர்ந்தவர் விவசாயி தங்கவேல் வயது 67. இரவு முசிறி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சூரை காற்றுடன் மழை பெய்தது சூரைகாற்றில் வேளாகாநத்தம் கிராமத்தில் மின் கம்பி அறுந்து கிழே விழுந்தது. அறுந்து கிடந்த மின் கம்பியை தங்கவேல் மிதித்தார். மின்சாரம் பாய்ந்து இறந்தார். முசிறி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து