மாவட்ட செய்திகள் மே 27,2023 | 18:11 IST
நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில், பள்ளி வாகன டிரைவர்களுக்கு தீ தடுப்பு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. கோத்தகிரி தீயணைப்பு நிலைய அலுவலர் கருப்பசாமி தலைமையில், வாகனங்களில் தீ விபத்து ஏற்படும்போது, தீயணைப்பு கருவி மூலம் எவ்வாறு தீயை அணைப்பது; தீ விபத்தில் அவசரக்கால கதவை பயன்படுத்தி மாணவர்களை பாதுகாப்பாக வெளியே கொண்டுவருவது; காஸ் சிலிண்டர் தீ பிடிக்கும்போது எப்படி அணைப்பது; நீரில் மூழ்கியவர்களை காப்பாற்றும் முறைகள் குறித்து, நேரடி செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இதில், தீயணைப்பு வீரர்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட டிரைவர்கள் மற்றும் கிளீனர்கள் பங்கேற்றனர்
வாசகர் கருத்து