மாவட்ட செய்திகள் மே 27,2023 | 18:21 IST
தேனி மாவட்டம் பெரியகுளம் குள்ளப்புரம், எ.வாடிப்பட்டி, கோவில்புரம், மேல்மங்கலம், காமக்காப்பட்டி, ஜெயமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் 500 ஏக்கரில் கிணற்று நீரை பயன்படுத்தி பருத்தி விவசாயம் நடக்கிறது. கடந்த ஆண்டு ஒரு கிலோ பருத்தி ரூ.100க்கு மேல் விற்பனையானதால் இந்தாண்டு விவசாயிகள் ஆர்வத்துடன் பருத்தி விவசாயத்தில் ஈடுபட்டனர். பருத்தி காய் பருவமடையும் நிலையில் செவட்டை நோய், வாடல் நோய், அஸ்வினி பூச்சிகளின் தாக்குதலால் பயிர்கள் சேதமடைந்து மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. நோய் தாக்குதலால் ஏக்கருக்கு 500 கிலோ மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளது. 1000 கிலோ வரை மகசூல் குறையும். விலையும் ரூ.60க்கு விலை போகிறது. இதனால் இந்தாண்டு பருத்தி விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அரசு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
வாசகர் கருத்து