மாவட்ட செய்திகள் மே 27,2023 | 19:05 IST
இந்தியாவில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக அதிக வேலைவாய்ப்பை அளிப்பது ஜவுளித்துறை. சுற்று சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாதது பருத்தி ஆடைகள் தான். இந்தியாவில் அந்த பருத்தியின் தரத்தை மேம்படுத்துவது அவசியமாக உள்ளது. மத்திய பட்ஜெட்டில் இ.எல்.எஸ். என்ற எக்ஸ்டிரா லார்ஜ் காட்டன் என்ற உயர்ந்த ரக பருத்திக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் இத்தகைய பருத்தி அதிகம் விளைகிறது. இந்த பருத்தியை விவசாயிகள் சாகுபடி செய்து அதிக லாபம் பெறலாம். ஜவுளித் துறையை மேம்படுத்துவதற்கு கோவையில் ஜவுளி பல்கலைக்கழகம் உருவாக்கப்பட வேண்டும் என்று கூறுகிறார் மத்திய அரசின் சர்தார் வல்லபாய் படேல் ஜவுளி தொழில்நுட்ப மைய இயக்குனர் அல்லிராணி. அவர் கூறும் கருத்துக்களின் வீடியோ தொகுப்பு இதோ.
வாசகர் கருத்து