மாவட்ட செய்திகள் மே 28,2023 | 00:00 IST
திருச்சி மாவட்டம் துறையூர் வருவாய் ஆய்வாளராக பணியாற்றுபவர் பிரபாகரன். இரவு நரசிங்கபுரம் பச்சமலை அடிவாரத்தில் அரசு புறம்போக்கு இடத்தில் ஜேசிபி வைத்து லாரி மற்றும் டிராக்டரில் மணல் அள்ளுவதாக தகவல் கிடைத்தது. மணல் கடத்தலை தடுக்க டூவிலரில் சென்றார். நரசிங்கபுரம் திமுக ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரன், ஜேசிபி உரிமையாளர் தனபால் மற்றும் மணி ஆகிய மூவரும் பிரபாகரனை தடுத்து கொலை மிரட்டல் விடுத்தனர். பிரபாகாரன் மணல் அள்ளிய லாரியின் சாவியை பிடிங்க முயற்சித்தார். ஆத்திரம் அடைந்த திமுகவினர் தலையில் கல்லால் தாக்கினர். கழுத்தின் பின்புறம் மணி பல்லால் கடித்தார். காயமடைந்த பிரபாகரன் அங்கிருந்து தப்பி துறையூர் அரசு ஆஸ்பிடலில் தீவிர சிகி்ச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். துறையூர் போலீசார் தப்பியோடிய திமுக ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரன், ஜேசிபி உரிமையாளர் தனபால், மணி மூவரையும் தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து