மாவட்ட செய்திகள் மே 28,2023 | 13:21 IST
தேனி மாவட்டம் கம்பம் நகரில் நேற்று ஹாயாக உலா வந்த அரிசி கொம்பன் காட்டுயானை இரவோடு இரவாக தமிழக கேரள வனப்பகுதிக்குள் சென்றது. அங்கிருந்து மீண்டும் அதிகாலையில் சுருளிப்பட்டிள்ள தோப்பு வழியாக சுருளி அருவிக்கு செல்லும் ரோட்டில் உள்ள பலா பழங்களை பிடுங்கி பசியாறியது. அங்கிருந்து ரோட்டை கடந்து வக்கில் செந்தில் என்பவரது தேங்காய் குடோன் கதவை உடைத்து சேதப்படுத்தியது. சுருளி அருவி கோடிலிங்கம் கோயில் வழியாக மேகமலை அடிவாரமாக உள்ள கூத்தணாட்சியம்மன் கோயில் பகுதியில் சுற்றி வருவதை வனத்துறையினர் ரேடியோ காலர் மூலம் கண்டறிந்தனர். முதுமலையில் இருந்து சுயம்பு என்ற கும்கியானை வரவழைக்கப்பட்டுள்ளது. மேலும் முத்து என்ற மற்றொறு கும்கி யானையும் இன்று காலை வந்தது. யானையை பிடிக்க ஏதுவாக ஒரு குறிப்பிட்ட பகுதியில் நிலை நிறுத்த நடவடிக்கையை வனத்துறையினர் செய்து வருகின்றனர். வனப்பகுதிக்குள் சிறப்பு பயிற்சி பெற்ற வனக்குழுவுடன் மருத்துவ குழுவினர் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க புறப்பட்டுள்ளனர். சுருளி அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளை கருநாக்க முத்தம்பட்டி விளக்கு அருகே காவல்துறை மற்றும் வனதுறையினர் தடுத்து திருப்பி அனுப்பி வருகின்றனர். திராட்சை, தென்னை விவசாய பகுதிக்குள் செல்ல தோட்ட தொழிலாளர்களை செல்ல அனுமதிக்கவில்லை. வனத்துறையினர், மருத்துவகுழுவினர் மற்றும் போலீசார் தவிர யாரும் அனுமதிக்கப்படவில்லை.
வாசகர் கருத்து