மாவட்ட செய்திகள் மே 28,2023 | 00:00 IST
சென்னை பூந்தமல்லி, நம்பி நகரை சேர்ந்தவர் ராஜா வயது 49. ஐஸ்கட்டி தொழில் செய்து வந்தார். மனைவி ஹேமாவதி, டில்லி பாபு என்ற மகன் உள்ளார். குடிப்பழக்கம் உடைய இவருக்கு சில தினங்களாக மனைவியுடன் தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் வீட்டின் 2வது மாடியில் தூங்க சென்றார். அதிகாலையில் மாடியிலிருந்து கீழே விழுந்து இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பூந்தமல்லி போலீசார் உடலை மீட்டு விசாரிக்கின்றனர். குடிபோதையில் தவறி விழுந்தாரா அல்லது மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சினையில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா என விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து