மாவட்ட செய்திகள் மே 28,2023 | 14:47 IST
திருப்பதி செம்மரக்கடத்தல் தடுப்பு அதிரடிப்படை டிஎஸ்பி முரளிதர் மேற்பார்வையில் போலீசார் குழு உருவாக்கப்பட்டது. குழுவினர் கடப்பா மாவட்டம் வாணிபெண்டா வனச்சரக திப்பிரெட்டிபள்ளியில் ரோந்து சென்றனர். சிலர் செம்மரக்கட்டைகளை கடத்தி சென்றனர். அவர்களை பிடித்து 14 பேரை கைது செய்தனர். 17 செம்மரக் கட்டைகளையும் பறிமுதல் செய்தனர். இதேபோல் அன்னமையா மாவட்டம், சிப்பகொண்டி டோனாவில் 6 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்தனர். மொத்தம் 16 கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டு ₹ 40 லட்சம் மதிப்புள்ள செம்மரங்களை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து