மாவட்ட செய்திகள் மே 28,2023 | 15:56 IST
திருச்சி மாவட்டம், மணப்பாறை விடத்திலாம்பட்டியில் மாரியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா கடந்த ஞாயிற்றுகிழமை காப்பு காட்டுதலுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான பால்குட எடுக்கும் விழா இன்று நடைபெற்றது. விநாயகர் கோயிலில் இருந்து பக்தர்களின் பால்குடம் முக்கிய வீதிகளின் வழியாக மாரியம்மன் கோயிலை அடைந்தது. அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர். தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்கள் கரும்பு தொட்டிலில் குழந்தைகளை சுமந்து வந்து நேர்த்தி கடன் செலுத்தினர். திரளானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து